புதுதில்லி:
கடந்த ஜூன் முதல் அக்டோபர் வரையில் பெய்த பலத்த மழையால், வெங்காயம் சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் விளைச்சல் குறைந்ததால் கடந்த சிலவாரங்களில் வெங்காயத்தின் விலை கடுமையாக அதிகரித்தது.
வெங்காய தட்டுப்பாட்டை தவிர்க்க சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் இறக்குமதியை அதிகரித்தனர். மத்திய அரசு வெங்காயம் ஏற்றுமதியை தடைசெய்தது. மேலும், வெங்காயம் கொள்முதல் செய்வதற்கும் வரம்பை விதித்துள்ளது. உள்நாட்டு சந்தைகளில் அதிகரித்து வரும் தேவையால், பயிரிடப் பயன்படுத்தும் விதைப்பு விதை வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.இதுதொடர்பாக வெளிநாட்டு வர்த்தகஇயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்நாட்டு சந்தைகளில் தேவை அதிகரித்துள்ளதால் பயிரிடப் பயன்படுத்தும் விதைப்பு விதை வெங்காயம் ஏற்றுமதி செய்ய தடை செய்யப்படுகிறது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வரும். ஏற்கனவேஏற்றுமதிக்கு தயாராக இருக்கும் விதைப்பு வெங்காயத்திற்கு இந்த உத்தரவு பொருந்தாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.